• Gold_bars_and_stones
  • wall
  • wall2
  • wall3
  • wall4
The_financial_crisis_Wallpaper_Gold_Gold_bars_and_stones_013929_1 wall2 wall23 wall34 wall45

அக்குபஞ்சர்

image

பாரத சேவாக் சமாஜில் நாங்கள் கற்று கொண்ட அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் கலைகளின் மூலம் நோயாளிகளின் நோய்த்தன்மையை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறோம்.மருந்து, மாத்திரைகள் இல்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல், எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் குணமாகும் மருத்துவம் அக்குபஞ்சர். அக்குபஞ்சர் மூலமாக எப்படிப்பட்ட நோயாயினும் குணப்படுத்த முடியும்.

நம்நாட்டில் சித்தர்களாலும் ஞானிகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே கண்டறியப்பட்டதுதான் அக்குபஞ்சர் என்னும் கலை. அது சீனாவில் பரவி அங்கு பல கட்டங்களில் விரிவடைந்து வளர்ந்தது. அதனால் அது சீன மருத்துவம் எனப்படுகிறது. ஆனால் அதன் மூலம் இந்தியாதான், குறிப்பாகத் தமிழ்நாடுதான் எனக் கூறப்படுகிறது. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில்,மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளைக் கொண்டு குத்தி நரம்புகள் மற்றும் தசைகளைத் தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாகச் செயல்படவைத்து நோயைக் குணப்படுத்துதல் அக்குபஞ்சர் எனப்படும்.

ஐயாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கலையான அக்குபஞ்சர் மருத்துவத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லை. பக்கவிளைவுகளும் இல்லாதது. இது நம் உடலில் உள்ள நாடித்துடிப்பு (Pulse) மூலம் நோயைக் கண்டறியக்கூடிய மருத்துவம்.

அக்குபஞ்சர் மருத்துவத்தை உலக சுகாதார நிறுவனம் (WHO) மருத்துவ முறையாக அங்கீகரித்ததற்குப் பிறகு தெற்காசிய நாடுகள் மற்றும் மேலை நாடுகளிலும் ஆயிரக் கணக்கான கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் கற்பித்து வருகின்றன.

பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீராக இயங்கவில்லை என்றால் உடலில் பல நோய்கள் தோன்றுகின்றன.பஞ்சபூதங்களான நெருப்பு, நிலம், காற்று, நீர் மரம் என ஐந்து மூலகங்களும் நம உடலில் எப்படி பரவி இருக்கின்றன என்று பார்ப்போம் .

சீன அக்குபஞ்சர் தாவோவின் இயக்கத்தின்படி கரு -உரு தத்துவம் (கரு/-உட்புறம், உரு-வெளிப்புறம்) என்று அழைக்கப்படுகிறது. சீனா கோட்பாட்டின் படி 12 பாதைகள் 15 இணைப்பு பாதைகள் 8 சிறப்பு பாதைகள் இவற்றின் மீது தான் அக்குபஞ்சர் புள்ளிகள் அமைந்துள்ளன.நம் உடலில் முக்கியமான 12 உள்ளுறுப்புகள் உள்ளன, அவை முறையே பஞ்சபூத சக்தியோடு எவ்வாறு செயல்படுகின்றன என்று பார்க்கலாம்.

மூலகங்கள் (five Elements)------- தொடர்புடைய உள்ளுறுப்புகள்
1. நெருப்பு (fire) - இருதயம், சிறுகுடல் , இருதய உறை, மூவெப்ப மண்டலம்.
2.நிலம் (Earth) - மண்ணீரல் , வயிறு.
3. காற்று (Metal/air) - நுரையீரல், பெருங்குடல்.
4. நீர் ( Water) - சிறுநீரகம், சிறுநீர்ப்பை.
5. மரம் ( wood ) - கல்லீரல், பித்தப்பை.

12 முக்கிய உறுப்புகளில் தேவைக்கு குறைவாகவோ , அதிகமாகவோ சக்தி பெறப்பட்டால் உடலில் தோன்றும் நோயின் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.

இருதயம் ( Heart)
படபடப்பு, கைகால்களில் தளர்ச்சி, சூடான உள்ளங்கைகள் , மூக்கில் வீக்கம், தூக்கமின்மை, அதிக வியர்வை, சிவந்த தோற்றம்.

சிறுகுடல் ( Small Intestine)
தலைவலி, கால்களில் ரத்தஓட்ட குறைவு, வயிறு பெருத்தல், மலச்சிக்கல், அஜீரணம், காதில் இரைச்சல், எப்போதும் குளிர்வது போன்று இருத்தல். இதயஉறை (Pericardium) படபடப்பு, குளிர்ந்த வியர்வை மிக்க கைகள், ஞாபகமறதி, உயரமாக இருப்பவற்றை பார்த்து பயம், அடிக்கடி கனவு காணுதல், தூக்கமின்மை, இதயவலி.

மூவெப்பமண்டலம் (Triple warmer)
காதில் இரைச்சல், காது மந்தம், மயக்கம், செரிமானமின்மை, மூச்சு கோளாறு, சிறுநீர் தொல்லைகள், எப்போதும் முன் எச்சரிகையாக செயல்படுவது போன்று எண்ணம்.

மண்ணீரல் (Spleen)
வயிற்றுப்போக்கு, மாதவிடாய் குறைபாடுகள், நீர்க்கோவை, அதிக எடை, இனிப்பின் மீது ஆர்வம், பாதங்களில் குளிர்ச்சி, அஜீரண கோளாறு,தொடர்ந்து மயக்க உணர்வு.

இரைப்பை (Stomach)
வாயில் கெட்ட நீர் ஊறுதல், உதடுகளின் வறட்சி, மார்பக அழற்சி, உணவின்மீது அதிக நாட்டம் (அ) உணவு உண்ண இயலாமை, கைகால் வீக்கம், அடிவயறு உப்பசம், மஞ்சளான தோற்றம்,

நுரையீரல் (Lungs)
தோள்பட்டைவலி, மூச்சுவாங்குதல், சளி, இருமல், கைகால் சில்லிடுதல், தோலில் வறட்சி, சக்தியின்மை, நடுக்கம், அசதி, சூடான உள்ளங்கைகள்.

பெருங்குடல் (Large Intestine)
தோள்பட்டை சரிவு, மலசிக்கல், வயிற்றுப்போக்கு, நமைச்சல், தலைவலி, பல்வலி, தொண்டைபுண், சீதளம், அடிக்கடி சளி பிடித்தல்.

சிறுநீரகங்கள் (Kidney)
மூச்சுத்தொல்லைகள், தொண்டைவீக்கம், மூட்டுவலிகள், பாலியல் தொல்லைகள், அசதி, களைப்பு, தளர்ச்சி, மனக்கவலை, இரவில் வியர்த்தல்.

சிறுநீர்ப்பை (Urinary Bladder)
தலைவலி, கழுத்து விரைப்பு, முதுகுவலி, நடுக்கம், கவலை, ஆவல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கொட்டாவி, கை நடுக்கம்,

கல்லீரல் (Lever)
பசியின்மை, எரிச்சல், கோபம், கண்புரை, கால்கள் வீக்கம், கெட்ட நாற்றத்துடன் சிறுநீர் போதல், வயிறு உப்பசம், கல்லீரல் அமைந்துள்ள வலது வயிறு பாகத்தில் வலி.

பித்தப்பை (Gall Bladder)
தலைவலி, கோபம், ஒவ்வாமை (அலர்ஜி ), கண்குறைபாடுகள், உணவு ஏற்காமை, வயிற்றுபோக்கு (அ ) மலச்சிக்கல், லேசாக அடிபட்டால் கூட சிவந்து போதல்.

அக்குபிரஷர்


அக்குபிரஷர் ஓர் பரம்பரிய சீன மருத்துவ முறையாகும். மாற்று மருத்துவமுறையான, மருந்தில்லா மருத்துவமான அக்குபிரஷர் முறையில் உடலிலுள்ள சக்தி நாளங்களை தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.

இயற்கைத் தத்துவங்களை அடிப்படையாகக்கொண்டு மெரிடியன் என்ற உடலில் உள்ள முக்கியப்புள்ளிகளில் அழுத்தம் தர மக்கள் பயனடைகின்றனர். இதை சுஜோக் தெரப்பி என்றும் அக்குபிரஷர் என்றும் சொல்லலாம்.

விரல்கள்,முழங்கை முதலியன கொண்டு குறிப்பிட்ட உடற்பகுதிகளில் அழுத்துவதன் மூலம் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு திறனை வெளிக்கொணருவதாகக் கூறப்படுகிறது. அக்குபஞ்சர் முறையும் அதே புள்ளிகளையும் மெரிடியனையும் பயன்படுத்துகிறது,ஆனால் ஊசிகளைக் கொண்டு குத்துவதன் மூலம் குருதி ஓட்டம் தூண்டப்பட்டு இயற்கை சக்திகளை உந்துகிறது.இவை உடற்பயிற்சிகள்,மனத்தத்துவம் மற்றும் உடற் பிடித்து விடல் முறைகளை ஒருங்கிணைத்து நோய்களை தடுக்கவும் குணமாக்கவும் செய்கிறது. இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் செய்திருக்கிறது.

உடலை அழுத்துதல் (Acu-pressure) பயிற்சியின் நன்மைகள்:
  1. உடலில் மின்சாரத் தடை நீங்கி, மின்சார ஓட்டம் சீரமைகிறது.
  2. நரம்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்திச் சீராக இயங்கச் செய்கிறது.
  3. வயிற்றில் உள்ளுறுப்புகள் சீரடைகின்றன. வலிமை பெறுகின்றன.
  4. இரத்த அழுத்த நோய் குறைகிறது. நரம்புத் தளர்ச்சி குறைகிறது.

 

 
 

எங்களது நோக்கம்

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!


எங்களது இலட்சியம்

நோயில்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்.