• Gold_bars_and_stones
  • wall
  • wall2
  • wall3
  • wall4
The_financial_crisis_Wallpaper_Gold_Gold_bars_and_stones_013929_1 wall2 wall23 wall34 wall45

ஹோமங்கள்

image

ஓம் ஸ்ரீ ஸப்த ரிஷி மண்டலத்தில் உங்களின் சகல விதமான பிரச்சினைகளையும் நாங்கள் ஹோமங்கள் நடத்தி தீர்த்து வைக்கிறோம். உங்களின் ஜாதகத்தை பார்த்து உங்களின் கிரக சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிகார ஹோமங்கள் நடத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறோம்.

பரிகாரங்களில் மிக சிறந்து விளங்குவது ஹோமங்கள் ஆகும். தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். ஹோமத்தில் தீயில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன.

இந்த ஹோமத்தீயில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரனமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தைப பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில் தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல காரயங்களுக்கும் பயன்படுகிறது.

ஹோமத்தின் போது புனித நீரால் கும்பத்தை நிரப்பி, அலங்கரித்து வேண்டிய தெய்வங்களை அதில் ஆவாஹனம் செய்து (வரவழைத்து), குத்து விளக்கில் அஷ்ட லட்சுமிகளை ஆவாஹனம் செய்து, ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரமோதி நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன.

ஹோமங்களும் பலன்களும் :

1. கணபதி ஹோமம் - தடைகள் நீங்கும்,
2. சண்டி ஹோமம் - தரித்திரம், பயம் விலகும்
3. சுதர்ஸன ஹோமம் - ஏவல், பில்லி,சூன்யம் நீங்கும், வெற்றி தரும்
4. நவகிரக ஹோமம் - நவகிரக கேடு நீங்கி மகிழ்சி தரும்
5. ருத்ர ஹோமம் - ஆயுள் விருத்தி உண்டாகும்.
6. ம்ருத்யுஞ்ச ஹோமம் - பிரேத சாபம் நீங்கும்
7. புத்திர காமோஷ்டி - குழந்தை பாக்யம் உண்டாகும்
8. சுயம்வர கலா - பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்
9. கந்தர்வ ராஜம் - ஆண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்
10. குபேர ஹோமம் - செல்வ வளம் தரும்
11. தில ஹோமம் - இறந்தவர்களின் சாபம் நீங்க
12. ப்ரத்யங்கரா - எதிரிகள் தொல்லை நீங்கும்

இன்னும் கண் திருஷ்டி ஹோமம், பிரம்மஹத்தி ஹோம்ம், மகாலட்சுமி ஹோமம் என்று பலப்பல ஹோமங்கள் உண்டு. ஜோதிட ரீதியாக கிரக நிலைகளை ஆராய்ந்து உரிய ஹோமங்களை செய்து வாழ்வில் வளம் பல பெற்று வாழ வாழ்த்துகிறேன்.

 
 

எங்களது நோக்கம்

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!


எங்களது இலட்சியம்

நோயில்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்.