• Gold_bars_and_stones
  • wall
  • wall2
  • wall3
  • wall4
The_financial_crisis_Wallpaper_Gold_Gold_bars_and_stones_013929_1 wall2 wall23 wall34 wall45

வர்மம்

image

சித்தர்கள் நோய்களின் மூல காரணங்களைக் கண்டறிந்து , அவற்றைப் பல பகுதிகளாகப் பிரித்து , பரிகாரம் செய்தனர்.அவற்றில் ஒன்றுதான் வர்ம பரிகாரம் ஆகும். வர்ம மருத்துவம் சித்த மருத்துவத்தில் தனித்தன்மை பெற்றதோடல்லாமல் ஒரு சில அவசர காலச் சிகிச்சையில் உதவும் சிறப்புடையது.

வர்மம்

சித்தர்கள் வகுத்த ஆயகலைகளுள் வர்மக்கலையும் ஒன்று. வர்மம் என்றால் உயிர் நிலைகளின் ஓட்டம் என்று பொருள். வர்மக்கலை என்பது சித்த மருத்துவ அறிவியலை முழுமையாகக்கொண்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவத்தில் விளக்கப்படாத, சித்தர்களால் மிக மறைவாக வைக்கப்பட்டுள்ள பல விடயங்களுக்கு வர்ம மருத்துவத்தில் விளக்கம் பெற இயலும். பல சித்த மருத்துவ இரகசியங்கள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்த அறிவியலை முழுமையாகப் புரிந்துகொள்ள வர்மக்கலை அறிவு அவசியம். எனவே, வர்மக்கலை தெரிந்தவர்கள் மட்டுமே முழுமையான சித்த மருத்துவர்களாக ஆகமுடியும்.

நம் உடலில் இருக்கின்ற உயிர்நிலை இடங்களாக இருக்கும் குறிப்பிட்ட இடங்களுக்கு வர்மம் எனப்பெயர். இவ்விடங்கள் இரகசியமாகவே வைக்கப்பட வேண்டியவை. ஆகவே, இதனை மர்மம் எனவும் கூறுவர். இதனைக் காலம், அடக்கம், சூட்சம், வன்மம், ஏமம் என்ற வேறு பெயர்களாலும் வழங்குவர். வர்மத்தைப் பல்வேறு வர்மானிய நூல்கள், பலவகையாகக் கூறினும், படு வர்மம் 12, தொடுவர்மம் 96 ஆக மொத்தம் 108 வர்மங்களையே முக்கியமாகக் கருதுகின்றனர். ஆசான் அகத்தியர் உடம்பிலுள்ள வர்மங்களை பற்றிக் கூறி இருக்கிறார்.

* தலைப்பகுதி வர்மங்கள் = 37
* நெஞ்சுப் பகுதி வர்மங்கள் = 13
* உடலின் முன் பகுதி வர்மங்கள் = 15
* முதுகுப் பகுதி வர்மங்கள் = 18
* கைப்பகுதி வர்மங்கள் = 17
* கால் பகுதி வர்மங்கள் = 32


இன்றைய சூழலில் வர்மக்கலை எப்படி வாழ்வில் பயன்படும்?

* மிகமிகக் குறைந்த செலவில் எலும்பு முறிவு மருத்துவம் செய்ய வர்ம மருத்துவம் துணை செய்கிறது. முறையாக ஆய்வு செய்யப்பட்டால் ஏழை மக்களுக்கு பெரும் பயனளிக்கும் மிகச்சிறந்த மருத்துவமாகஇது திகழும்.

* எலும்பு முறிவினால் பாதிக்கப்பட்டு வரும் பின்விளைவுகள், உறுப்புகள் செயல்பாடின்மை, மேலும் அறுவை சிகிச்சை செய்தும் பயனளிக்காது என்று கைவிடப்பட்ட பல நோய்களை வர்ம மருத்துவத்தால் தீர்க்க முடியும். நோய்களால் ஏற்படும் பல எலும்புமுறிவுகளையும் (Pathological Fracture) சரிசெய்ய முடியும். * வர்ம மருத்துவத்தில் நரம்பு நோய்களுக்கான மருத்துவம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, அனுபவரீதியாகப் பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

* வர்ம மருத்துவ அடிப்படையிலான தடவுமுறைகள், பூச்சு முறைகள், ஒத்தட முறைகள், வேது பிடித்தல், கட்டு போடுதல் போன்றவை மருந்தில்லா மருத்துவமாகப் பயன்படுத்தப்பட்டுவருவது இதன் சிறப்பம்சமாகும்.

* குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோரை எவ்வாறு தடவ வேண்டும், எந்தெந்த இடங்களைத் தூண்டவேண்டும் என்பன போன்ற தௌ¤வான விள௧கங்கள் இம்மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன. இதன் தடவுமுறையால் ஏராளமான ஆற்றலை உடலில் உருவாக்க முடியும் என்பதை எங்களின் அனுபவரீதியிலாகக் கண்டறிந்துள்ளோம்.

* விக்கல், வாந்தி, சன்னி, மயக்கம், நாக்கு புறந்தள்ளல், நாக்கு உள்ளே இழுக்கப்படுதல், பைத்தியம்போல் பேசுதல் போன்ற பல்வேறு வர்ம விளைவுகளை அவற்றின் அடங்கல்களை தூண்டுவதன் மூலம் கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்க்க இம்மருத்துவ முறையால் முடியும். பார்ப்போருக்கு இது ஏதோ கண்கட்டு வித்தை போலத் தோன்றும்.

நமது உடலில் நடுப்பகுதியில் ஏழு ஆதாரங்களான (சக்கரங்கள்) சக்தி நிலைகள் உடலில் உள்ளன.

இதையே விநாயகர் அகவலில்

"ஆறாதாரத்து அங்கிசை நிலையும்
பேரா நிறுத்தி பேச்சுரை யறுத்து
இடை பிங்கலையின் எழுத்தறிவித்து
கடையிற் சுழிமுனைக் கபாலம் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்றுஎழு பாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலியதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்து மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே"

நமது முதுகுத்தண்டு (தூண்) வடத்தின் உள்ளே இடகலை, பிங்கலை, சுழிமுனை( மூன்று மண்டலம்)ஆகிய நாடிகள் ஓடுகின்றன்.(இதுவே மூன்று மண்டலத்து முட்டிய தூணின்). நமது மூச்சு ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் 1மணி நேரத்திற்கு 900 மூச்சு வீதம் ஒரு நாளைக்கு 21,600 மூச்சுக்கள் ஓடுகின்றன. அந்த 21,600 மூச்சுக்களில் துரியம், ஆக்கினை, விசுத்திச் சக்கரங்கள் முறையே 6000 மூச்சுக்கள் வீதம் 18,000 எடுத்துக் கொள்கின்றன. அடுத்துள்ள அனாகதம், மணிப்பூரகம், சுவாதிட்டானம் இம் மூன்று சக்கரங்களும் 1000 வீதம் 3000 மூச்சுக்களை எடுத்துக் கொள்கின்றன.

மீதம் உள்ள 600 மூச்சுக்களை மூலாதாரம் எடுத்துக் கொள்கின்றது. இவ்வாறு மூச்சை எடுத்துக் கொள்வதன் மூலம் இயங்கும் சக்கரங்கள், இவை இயங்கும் அந்தந்தப் பகுதிகளை பார்த்துக் கொள்வதுடன், அந்த இடத்தின் உள் உறுப்புக்களையும் பார்த்துக் கொள்கின்றன. இவையே நம் உயிர் இயங்கத் தேவையான சக்தியினை மூச்சின் மூலம் பெற்று உடலெங்கும் 72000 நாடி நரம்புகளின் வாயிலாக பாய்ந்து உடலை இயக்குகின்றன. இதில் நம் உடலின் 96 தத்துவங்கள் உள்ளன.அவற்றிற்கு ஒரு வர்மம் வீதம் 96 தொடுவர்மங்கள் உள்ளன.12வர்மங்கள் படுவர்மங்கள் உள்ளன.

ஓம் ஸ்ரீ ஸப்த ரிஷி மண்டலத்திற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு வர்மம் மருத்துவம் மூலம் பக்க விளைவுகள் இல்லாத சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவரவர் கிரகங்களின் தன்மைகளுக்கு ஏற்ப சித்தர்களின் மரபின் படி வர்ம மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 
 

எங்களது நோக்கம்

எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க வேண்டும் என்று நினைப்பதை தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே!


எங்களது இலட்சியம்

நோயில்லா உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களது இலட்சியம்.